அதிமுக தனித்து நிற்க தயார்: செல்லூர் ராஜூ

அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நிற்க தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ” ‘சந்திரமுகி’ படத்தில் பேயைப் பார்க்க சென்று மாட்டிக்கொண்டு புலம்பித் தவித்த வடிவேல் போல, முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைமை இருக்கிறது” என்று கிண்டலடித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எந்த இயக்கத்திலும் மக்களை வசீகரிக்கக்கூடிய, வலிமையான தலைவர் இல்லை.

’அதிமுகவில் தற்போது வலிமையான தலைவர் இல்லை’ எனச் சொல்லும் ஸ்டாலின், ’அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும்’ என ஆருடம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், ஆட்சி 4.5 ஆண்டுகள் நீடித்தது.

எனவே அதிமுகவை வழிநடத்தும் வலிமையான தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். திமுகவுக்குதான் பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்காக உள்ளது.

இந்தி திணிப்பு விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் இருக்க வேண்டும். இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கிறது.

மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது. எந்த முதலமைச்சரும் இவ்வளவு மனம் வெதும்பி பேசியதாக வரலாறு இல்லை.

ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். நான் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார் சென்றபோது,

என்னை உடனடியாக விசாரித்து, என்னுடைய மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார்.

அதுபோல முதலமைச்சர் ஸ்டாலின் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் இப்படி பேசியது திடமான தலைமைக்கு அழகல்ல.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 4 தொகுதிகளில்கூட வெல்வது சந்தேகமே. திமுக தனித்து நிற்கப்போவதாக சொல்கிறார்கள்.

அதுபோல் ஏன் அதிமுகவும் தனித்து நிற்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.

எல்லா கட்சியும் தனித்து நிற்கட்டும். யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என தெரிந்துகொள்ள, அது வசதியாக இருக்கும். திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க தயார்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

மதவாதத்தை முறியடிப்போம்: மனித சங்கிலி போராட்டம்!

பாட்டாளி மாடல்: அன்புமணியின் புது முழக்கம்! 

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *