நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு 31-பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (ஜனவரி 18) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அக்கட்சியின் மேலிட தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது கூட்டணி விவகாரங்கள், தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தக் குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, கோபிநாத், ஜெயக்குமார்,
விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், ஹரூண், பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், ராஜேஷ் குமார், மெய்யப்பன், விஷ்வநாதன், கிறிஸ்டோபர் திலக், மயூரா எஸ்.ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், பிரவீன் சக்கரவர்த்தி, ஆர்ம்ஸ்ட்ராங்க் ஃபெர்ணாண்டோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தேர்தல் குழுவை அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ குடும்பம்? : நடந்தது என்ன?
மோடி வருகை: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?