2024 நாடாளுமன்றத் தேர்தல்: பாஜக இன்று ஆலோசனை!

அரசியல்

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக, பாஜகவின் தேசிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்றும்(டிசம்பர் 5) நாளையும்(டிசம்பர் 6) டெல்லியில் நடைபெறுகிறது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தற்போதே ஆயத்தமாகி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்றும் நாளையும் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை தொடரவும் எதிர்க்கட்சிகளை வீழ்த்தவும் பா.ஜ.கவியூகம் வகுத்து வருகிறது.

மேலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், திரிபுரா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த மாநிலங்களில் வெற்றி பெறவும் பா.ஜ.க.காய் நகர்த்தி வருகிறது.

parliament election bjp national meeting

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் இந்த மாநில தேர்தல்கள் இந்திய அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்தே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், தேசிய நிர்வாகிகள் மட்டுமின்றி, மாநில பா.ஜ.க. தலைவர்களும், பொதுச்செயலாளர்களும், மத்திய பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.

குஜராத் சட்டசபை தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதையடுத்து, தனது வாக்கைச்செலுத்தும் மோடி, பின்பு டெல்லி புறப்பட்டுச் சென்று இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்தக் கூட்டத்தில், தேர்தல்களுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

மேலும், கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக குறைந்தஓட்டில் நாடுமுழுவதும் 144மக்களவை தொகுதிகளின் வெற்றிவாய்ப்பை இழந்தது.

அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது குறித்து கள நிலவரங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற தலைவர்களின் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் இந்தகூட்டத்தில் அந்த அறிக்கையை சமர்பிக்க உள்ளனர்.

தவிர, அதுகுறித்தும், தற்போது கைவசம்உள்ள தொகுதிகளை தக்கவைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

ஜி20: மோடி தலைமையில் இந்தியா

ஜெ. நினைவு தினம்: அதிமுகவினர் தனித்தனியாய் அஞ்சலி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.