ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (பிப்ரவரி 2) கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்தநிலையில், ஆளுநர்களின் செயல்பாடுகள் கூட்டாட்சிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருப்பதாகவும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அதேபோல, கடும் மழை, வெள்ளம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.
ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கானது தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக தலைமையில் கூட்டணி என்னாச்சு? மீண்டும் தமிழகம் வரும் பி.எல். சந்தோஷ்
சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை!