நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்று (டிசம்பர் 6) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நாளை ( டிசம்பா் 7) தொடங்க இருக்கிறது.
குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்கள் சில மாநிலங்களின் இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக குளிா்கால கூட்டத் தொடா் தொடங்குகிறது.
டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், 17 அமா்வுகள் இடம்பெற உள்ளன.
இதற்கிடையே, கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட உள்ள மற்றும் விவாதிக்கப்பட விருக்கும் முக்கியத் தீா்மானங்கள், விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று (டிசம்பர் 6) கூட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த அவைத் தலைவா்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதுபோல, நாடாளுமன்றத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டமும் இன்று மாலை தனியாக நடைபெற உள்ளது.
இதில், மக்களவையில் முன்வைக்கப்படவுள்ள தீா்மானங்கள் மற்றும் எந்தெந்த கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
கூட்டத்தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கட்சித் தலைவா்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, கொலீஜியம் தொடர்பாக மத்திய அரசு – உச்ச நீதிமன்றம் இடையிலான சமீபத்திய மோதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதேநேரத்தில், அவையை அநாவசியமாக முடக்க மாட்டோம். மக்கள் பிரச்னைகளை முன்வைப்போம் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கேரள வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தில் உள்ளதால் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் வட்டத்தில் சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான வியூகம் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம், கடந்த நவம்பர் 3ஆம் தேதி டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
டிசம்பர் 8ல் அதி கனமழை: வானிலை அலர்ட்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!