parliament adjourned till 2 pm

வண்ண புகைகுண்டு வீச்சு: அமித்ஷாவிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி!

அரசியல்

parliament adjourned till 2 pm

மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்தது குறித்து விவாதம் தேவை என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று (டிசம்பர் 13) மக்களவையில் பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் குதித்து வண்ண வெடிகுண்டுகளை வீசினர்.

உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகிய இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்தனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கமிட்ட நீலம், அமோல் ஷிண்டே ஆகிய 2 பெண்களையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களின் சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அவை நடவடிக்கைகள் தொடங்கியது.

இன்றைய கூட்டத்தில் எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற செயலக ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் மக்களவை செயலக ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

கேரளாவில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு!

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மின் கணக்கீடு கிடையாது! – தமிழ்நாடு அரசு

விடாமுயற்சி படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!

parliament adjourned till 2 pm

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *