’பப்பு’ பெயர்: ராகுல் சொன்ன நச் பதில்!

அரசியல்

தன்னை எல்லோரும் ‘பப்பு’ என அழைப்பதற்கு, ராகுல் காந்தி தக்க பதிலைத் தந்துள்ளார்.

சமீபகாலமாக ‘பப்பு’ என்ற வார்த்தை அரசியல் உலகில் பலராலும் பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ, பிரதமர் நரேந்திர மோடியை ’குஜராத்தின் இரக்கமற்ற கொலையாளி’ எனப் பேசியதற்கு பதிலடி கொடுத்த பாஜகவினர், “பிலாவல் புட்டோவின் கருத்தினை பாகிஸ்தானில் உள்ளவர்களே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் பாகிஸ்தானின் பப்பு. அவர் பாகிஸ்தான் பப்புவாகவே இருப்பார்” என்றனர்.

எம்.பி. எழுப்பிய பப்பு

அதுபோல், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சுட்டிக்காட்டிய திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்தா, ’ஆளும் கட்சியும்தான் பப்பு என்ற வார்த்தையை உருவாக்கியது. நீங்கள் அதை இழிவுபடுத்தவும், திறமையின்மையைக் குறிக்கவும் பயன்படுத்துகிறீர்கள்.

ஆனால் இப்போது உண்மையான பப்பு யார் என்பதை நம்மிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. ஆளும் கட்சியின் தலைவரின் (ஜேபி நட்டா) சொந்த மாநிலத்திலேயே அவர்களால் வெல்ல முடியவில்லை. இப்போது யார் பப்பு? 2014 முதல் இந்த அரசு அமைந்த பிறகு சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்.

'Pappu' name: Rahul's response!

செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, அத்துடன் ஒவ்வொரு முறையும் ‘யார் பப்பு’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”மஹுவா மொய்த்ரா `யார் பப்பு, பப்பு எங்கே இருக்கிறார்?’ எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். அதற்கு அவர், தன் வீட்டின் கொல்லைப்புறத்தைப் பார்க்க வேண்டும். அப்போது பப்பு மேற்கு வங்கத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுலையும் பாஜகவினர் வடமாநிலங்களில் ‘பப்பு’ என்று பல ஆண்டுகளாக அழைத்து வருகின்றனர். இந்தியில் ‘பப்பு’ என்றால் சிறுவன் என்று பொருள்.

பப்புக்கு ராகுல் சொன்ன பதில்!

இந்த வார்த்தையை சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜகவினர் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது. அந்த வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையமும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகே இந்த ‘பப்பு’ என்ற வார்த்தை சமீபகாலமாக பேசுபொருளாகியுள்ளது.

'Pappu' name: Rahul's response!

அதேநேரத்தில், ’பப்பு’ என்று அழைக்கும்போது தாங்கள் மோசமாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு ராகுல் தற்போது பதிலளித்துள்ளார். இதுகுறித்து மும்பையில் பாரத் ஜோடா யாத்திரையின்போது ராகுல்காந்தி அளித்த பேட்டி, தற்போது அவருடைய யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில், “என்னை பப்பு என அழைப்பதை மோசமாக உணரவில்லை. அது அவர்களின் இதயத்தில் உள்ள பயத்தை காட்டுகிறது. அவர்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர்.

என்னை பல பெயர்களில் அழைப்பதை நான் வரவேற்கிறேன். இதனை நான் நன்றாக உணர்கிறேன். தயவுசெய்து எனது பெயரை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது பாட்டி இந்திராகாந்தி, இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுவதற்கு முன்பு அவர் ‘குங்கி குடியா’ என்று அழைக்கப்பட்டார். 24 மணி நேரமும் என்னை தாக்கும் அதே நபர்கள் எனது பாட்டியை ‘குங்கிகுடியா’ என்று அழைத்தார்கள்.

திடீரென்று ‘குங்கிகுடியா’ இரும்பு பெண்மணி ஆனார். அவர் எப்போதும் இரும்பு பெண்மணியாகவே இருந்தார். எனவே, என்னை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என ராகுல் அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து: எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *