பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கம்!

அரசியல்

பண்ருட்டி ராமச்சந்திரனை இன்று காலை அரசியல் ஆலோசகராகப் பன்னீர் செல்வம் நியமித்த நிலையில் அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தொடர்ந்து அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசி வந்தார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 27) காலை அவரை அதிமுகவின் அரசியல் ஆலோசகராகப் பன்னீர் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Panruti Ramachandran removed from AIADMK edappadi

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,

கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்,

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்

கழக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

எடப்பாடிக்கு எதிரான வழக்கு : செப் 30ல் விசாரணை!

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேரலையில் ஒளிப்பரப்பு!

+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *