பதவிக்காக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பன்னீர்: வச்சி செஞ்ச ஆறுமுகசாமி ஆணையம்!

அரசியல்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் அதன் பின் தனது  பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தம் நடத்தியது அரசியல் ஆதாயத்துக்காகவே என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. 

தனது கோரிக்கையின் பேரிலேயே இந்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டும், எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆணையத்தில் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஆஜராகாத பன்னீர் செல்வம்…ஒன்பதாவது முறைதான் ஆஜரானார். 

இந்த நிலையில்  அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டு வெளியிடப்பட்ட  ஆணைய அறிக்கையில்  பன்னீர் பற்றி சில வரையரைகளை செய்துள்ளார் ஆறுமுகசாமி. 

 “ஓ. பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன்  அவரது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருந்தார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சிறிதும் காலம் தாழ்த்தாமல்  தமிழக முதல்வர் பதவிக்கு தன்னைப் பொருத்திக் கொள்ள தயார் நிலையில் இருந்து  ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது  தற்செயல் நிகழ்வாகத் தோன்றவில்லை.

அதிகார மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதியதாக கிடைத்த பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஏமாற்றத்தால் கோபமடைந்த பன்னீர்செல்வம் அரசியல் லாபத்தை அடையும் நோக்கில்  2017 பிப்ரவரியில் தர்மயுத்தம் தொடங்கினார்.

ஒரு அமைதியான பார்வையாளராக இருந்த அவர்,  மருத்துவமனையில் என்ன நடந்தது, குறிப்பாக சிகிச்சை முறையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்திருந்தார்.  தனது பதவியை இழந்த பின் அவர் தர்ம யுத்தத்தை நாடி சிபிஐ விசாரணை கோரினார்.

எனினும் விதிப்படி துணை முதல்வர் பதவிக்கு அவர் தன்னை பொருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இதுவும் வல்லவனின் தந்திரமாக இருக்கலாம்.

தான் விரும்பியதில் ஒரு பகுதி மட்டுமே அவருக்குக் கிடைத்திருப்பினும் மாற்றத்தின் மாறாத தன்மையாக  புதிய பரிமாணத்தில்…

‘செய்தித் தாளில் வெளியான மறைந்த முதல்வரின் மரண மர்மம் பற்றிய பொதுமக்களின் அறிக்கைகள், வதந்திகள், சந்தேகங்களின் அடிப்படையிலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அவர் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான காரணங்களை நிராகரித்துள்ள இந்த நிகழ்வு…

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விரோதமாக மாறுவதை  நினைவூட்டுவதுடன் நேர்மையாகவும் நியாயமாகவும் நிகழ்வுகளின் உண்மைச் சூழலை  வெளிக் கொணரும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார் ஆறுமுகசாமி. 

வேந்தன்

துப்பாக்கிச் சூடு: சேலம் வரை சென்று சொல்லியும் கண்டுகொள்ளாத எடப்பாடி

திருப்பதி போறீங்களா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.