சட்டப்பேரவை இருக்கை: பன்னீருக்கு அதே இடம்?

அரசியல்

அதிமுக எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருக்கைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (அக்டோபர் 17) தொடங்குகிறது.

கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அத்துடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, இந்த மழைக்கால கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத் தொடரில், நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை, நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்டம், டேவிதாரின் விசாரணை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த நிலையில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி பூசலால், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்.

எனவே, அவருக்கே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்களும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், இப்போது எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வலியுறுத்தி உள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மு.அப்பாவு இன்று முடிவு எடுப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில்,

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை விதியின்படி சபாநாயகருக்கு உள்ள உரிமை அடிப்படையில் துணைத்தலைவர் விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற பேரவை விதி 6இன்படி இந்த கூட்டத் தொடரில் முந்தைய நிலையே தொடர சபாநாயகர் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

எடப்பாடி Vs பன்னீர்: இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கும்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *