பன்னீரின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!

அரசியல்

அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருக்கிறார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெயக்குமார், ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டப்படி செல்லும், தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்ற 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு என்பது வரவேற்கத்தக்க, அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும்.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தையும், ஒற்றை தலைமை என்கிற அங்கீகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எந்த அடிப்படையில் பொதுக்குழு கூட்டினார்களோ அந்த அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவை கூட்டினார்.

அதனால் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதை சட்ட வல்லுநர் குழு முடிவு செய்யும்.

சட்டத்தின்படி தீர்ப்பு வந்திருக்கிறதை மகிழ்ச்சியாகக் கொண்டாடி கொண்டிருக்கிறோம். அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது” என்றார்.

கலை.ரா

பொதுக்குழு தீர்ப்பால் எந்த சஞ்சலமும் இல்லை : ஓ.பி.எஸ் தரப்பு! 

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.