எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 10 பேரை கட்சியிலிருந்து நீக்கி இன்று (ஜூலை 25) அறிவிப்பு வெளியிட்டுள்ளார், ஓ.பன்னீர்செல்வம்.
எடப்பாடிக்கும் பன்னீருக்குமான அதிகார யுத்தத்தில் ஒருவரையொருவர் முதலில் நீக்கிக்கொண்டனர். பிறகு இரண்டு தரப்பினரும், மாறிமாறி கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டனர். இதனால், அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான மாவட்டச் செயலாளர்கள் 10 பேரை இன்று (ஜூலை 25) அதிமுகவிலிருந்து நீக்கியிருக்கிறார், ஓ.பன்னீர்செல்வம்.
விருதுநகர் மாவட்டம் ராஜேந்திர பாலாஜி, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ராஜு, கடலூர் மாவட்டம் எம்.சி.சம்பத், திருப்பூர் மாவட்டம் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுணியம் பலராமன், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, ரவிச்சந்திரன், கிருஷ்ணமுரளி, வி.எஸ்.சேதுராமன் உட்பட 10 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்