கள ஆய்வுக்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்றுள்ளார். Stalin shared history in nellai
நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று (பிப்ரவரி 7) நெல்லையில் ரூ.1304.66 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
வெள்ளித் தேரோட்டம்! Stalin shared history in nellai
நிகழ்ச்சியில் பேசிய அவர், “நெல்லையின் அடையாளங்களில் முக்கியமானது, ஏழாம் நூற்றாண்டில், “நின்றசீர் நெடுமாறப் பாண்டியரால்” கட்டப்பட்ட நெல்லையப்பர் கோயில். இப்படி பாரம்பரியம் மிக்க கோயிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து, திருப்பணிகள் செய்தவர் கலைஞர்.
அதேபோல, நம்முடைய ஆட்சியில் தான் நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது. அதேபோல, வரும் நவம்பருக்குள் கோயிலின் வெள்ளித்தேர் ஓடும்” என்றார்.
நெல்லைக்கு கலைஞர் என்னென்ன செய்தார் என்று பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “1965-ஆம் ஆண்டு தமிழ்மொழி காக்க மாபெரும் போர் தமிழ்நாட்டில் நடந்தபோது, அதை தூண்டியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில்தான் அடைக்கப்பட்டார். அதற்கு அடுத்த தேர்தலில் தி.மு.க ஜார்ஜ் கோட்டையை பிடித்தது என்பது வரலாறு! தமிழரின் வரலாற்றுப் பெருமைக்கும் இந்த நெல்லை மண்தான் அடையாளம்” என கூறினார்.
அமைச்சருக்கு பாராட்டு Stalin shared history in nellai
மேலும் அவர், “தமிழர்களின் வரலாற்றுப் பெருமைக்கு அடையாளமாகவும், வரலாற்றுத் தொன்மையும், வீரமும், மிகுந்த நெல்லை மாவட்டத்தில் இந்த அரசு விழாவை எழுச்சியோடு, இங்கே அமர்ந்தவுடன் நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சொன்னார், என்னப்பா, இது மாநாடு போல் இருக்கிறது என்று சொன்னார்; ஆகவே, பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைச்சர் நேருவை பொறுத்தவரைக்கும், எதையும் பிரமாண்டமாக நடத்தித் தான் அவருக்கு பழக்கம். சிறியதாக எல்லாம் அவருக்கு நடத்த தெரியாது; வராது. அதேபோல், அனைத்து மாவட்டங்களையும் தன்னுடைய சொந்த மாவட்டங்களாக நினைக்கும் பரந்த உள்ளம் கொண்டவர் அமைச்சர் நேரு.திருச்சி மண்டலத்தை வளர்த்தெடுத்த அமைச்சர் நேருவுக்கு முதலில் சேலம் மாவட்டப் பொறுப்பை வழங்கினோம். சேலத்தை சீர் செய்தார்!
அடுத்து, நெல்லையை வழங்கினேன். நெல்லையை நேர் செய்துள்ளார் நேரு! ஏராளமான திட்டங்களை உருவாக்கி, அதற்கான நிதிகளையும் பெற்று உரிய காலத்துக்கு முன்னதாக திட்டங்களையும் முடித்துக் காட்டி நெல்லை மாவட்டத்தை சீர்மிகுவுக்கு மாற்றிக்கொண்டு வரும் அமைச்சர் நேரு அவர்களுக்கும் இந்த மாவட்ட நிர்வாகத்துக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும்! வாழ்த்துகளும்” என்றார்.

என்னென்ன திட்ட பணிகள்?
“•ஆயிரத்து 304 கோடி ரூபாய் மதிப்பிலான 23 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா
•309 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா
•பல்வேறு அரசுத் துறைகள் சார்பாக 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமான உபரி நதி நீர் இணைப்புத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞரால் அறிவிக்கப்பட்டு, நம்முடைய மூத்த அமைச்சர் துரைமுருகன் மேற்பார்வையில் தொடங்கப்பட்டு, இன்று அவர் முன்னிலையில் திறக்கப்பட்டிருக்கிறது.
தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு, உபரி நதிநீர் இணைப்புத்திட்டம் மிக மிக முக்கியமான திட்டம். இது மூலமாக, தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை 75 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய் மூலம் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை மற்றும் சாத்தான்குளத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.
இது ஒரு முன்னோடியான நதி நீர் இணைப்புத் திட்டம். இதன் திட்ட மதிப்பு ஆயிரத்து 60 கோடியே 76 இலட்சம் ரூபாய். கடந்த 2 ஆண்டுகளாக நடந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இன்றைக்கு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் நெல்லைக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதாவது,
•தாழையூத்து முதல் ‘கொங்கந்தான் பாறை விலக்கு’ வரை திருநெல்வேலி மாநகருக்கான மேற்குப் புறவழிச்சாலை,
•அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை,
•தாமிரபரணி நதியை நீராதாரமாக கொண்டு 605 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,
•களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு 423 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
•திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-22 முதல் டிசம்பர் 2024 வரை 5 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 405 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, 115 குடியிருப்பு பகுதிகள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
•திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம்
•முறப்பநாடு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
•மணிமுத்தாறு அணைப்பூங்கா பகுதியில் பல்லுயிர்ப் பூங்கா மற்றும் சாகச சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது.
•திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் புதிய ஐ.டி. பூங்கா
•வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை
•திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகம்
•திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், இதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான உயர்சிறப்பு மருத்துவப் பிரிவு
•அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்
•மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவு, என்.சி.டி. பிளாக் மற்றும் டயாலிசிஸ் பிரிவு
•பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை
•மானூர் வட்டம் மதவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி
•காணி பழங்குடியின மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையான விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட காரையாறு – சின்னமயிலாறு இடையே, தாமிரபரணி ஆற்றைக் கடக்க, இரும்பு பாலம் என இப்படி பல திட்டப்பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். Stalin shared history in nellai