‘ஜெய் ஸ்ரீ ராம்’ சர்ச்சை: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!

Published On:

| By christopher

pakistan cricket field strong complaint against BCCI

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த அக்டோபர் 14 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில், பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அட்டமிழந்து ஃபெவிலியன் திரும்பியபோது, அவரை நோக்கி போட்டியை காணவந்த ரசிகர்கள் சிலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பினர்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தியாவில் உள்ள பல அரசியல் தலைவர்கள் இந்திய அணி ரசிகர்களின் இந்த செயலுக்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.

pakistan cricket field strong complaint against BCCI

போட்டிக்கு பின் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர்,

“இது ஐசிசி நடத்திய போட்டி போல இல்லை. பிசிசிஐ நடத்திய போட்டி போல இருந்தது” என கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய மிக்கி ஆர்தர், “மைதானத்தில் ஒரு பாகிஸ்தான் ரசிகரை கூட பார்க்க முடியவில்லை. அது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கறது.

மைதானத்தில் ஒலிக்கப்பட்ட பாடல்களும் கூட முழுமையாக இந்தியாவுக்கு ஆதரவான பாடல்களாகவே இருந்தது.

இது ஒரு உலகக்கோப்பை போட்டி போலவே இல்லை. நாங்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் எங்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று தான் எதிர்பார்த்தோம்”, என தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

இது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ள ட்விட்டில், ’அக்டோபர் 14 அன்று நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து புகார் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்கு விசா வழங்குவதில் நிகழ்ந்த தாமதங்கள் மற்றும் 2023 உலகக்கோப்பையை காண பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ‘விசா கொள்கை’ வகுக்கப்படாதது உள்ளிட்டவை குறித்தும் புகார் வழங்கப்பட்டுள்ளது’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளது.

pakistan cricket field strong complaint against BCCI

போட்டியை காண டிக்கெட் பெற்றிருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு முறையான விசா கொள்கையை இந்தியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

ODI Worldcup 2023: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து!

சூதாட்டத்தில் ரூ.42 லட்சம் இழப்பு: கொள்ளையனாக மாறிய கான்ஸ்டபிள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel