கர்நாடக தேர்தல்: இந்தியக் குடியரசு கட்சிக்கு பா.ரஞ்சித் ஆதரவு!

அரசியல் சினிமா

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய கட்சிகள் இறுதி செய்து அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

தங்கலான் படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் முகாமிட்டிருந்த இயக்குநர் ரஞ்சித்,

கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரனை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக சார்பில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் அத்தொகுதியை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளார்.

கோலார் தங்கவயலில் உள்ள ராபர்ட்சன் பேட்டை, மாரிக்குப்பம், சாம்பியன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.

இது பற்றி பா.ரஞ்சித் கூறுகையில், ”கோலார் தங்கவயல் தொகுதி இந்தியக் குடியரசு கட்சியின் சொந்த‌ தொகுதி. இந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பல முறை வெற்றிப் பெற்றுள்ளனர்.

தற்போது இந்தத் தொகுதியை இந்தியக் குடியரசு கட்சி இழந்துள்ளது. இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றும் சூழல் தற்போது அமைந்துள்ளது. கோலார் தங்கவயல் தமிழர்கள் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, தங்கவயல் மக்கள் எஸ்.ராஜேந்திரனை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் ரீதியாக பா.ரஞ்சித் எந்த கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக இதுவரை பேசியது இல்லை.

எந்த கட்சியின் உறுப்பினராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஞ்சித் படப்பிடிப்புக்காக கர்நாடகா மாநிலம் சென்றவர் அங்கு அரசியல் ரீதியாக குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது விவாதப்பொருளாகி வருகிறது.

இராமானுஜம்

திமுக கவுன்சிலரை காப்பாற்ற முயற்சி : ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

கல்லால் பல்லை உடைத்தார்: பல்வீர் சிங் மீது இன்னொரு புகார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *