இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா… ப.சிதம்பரம் எழுப்பும் கேள்விகள்!

Published On:

| By Selvam

அமெரிக்காவில் இருந்து இன்று (பிப்ரவரி 15) இந்தியா திரும்பும் 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி-யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Chidambaram questions US illegal

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கைது செய்து அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், இயற்கை உபாதை கூட போகவிடவில்லை என்று பேட்டி அளித்தது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சட்டவிரோதமாக குடியேறிய 109 இந்தியர்களை அமெரிக்க ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. இன்று இரவு 10 மணிக்கு 109 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைகின்றனர்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது.

அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது. அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்று கேள்வி எழுகிறது.

அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா? இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால். இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும். இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். Chidambaram questions US illegal

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share