நாங்கள் பேசுவதே போராட்டம் தான்: கார்த்தி சிதம்பரம்

அரசியல்

தெருவில் இறங்கி போராடுவது மட்டுமே போராட்டம் கிடையாது. மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே போராட்டம் தான் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், ”எப்படி அனைத்து திருடர்களின் துணைப் பெயரும் ‘மோடி’ என்றே இருக்கிறது?” என்று பேசியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது சூரத் நீதிமன்றம் . அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று (மார்ச் 26) சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது.

இந்த போரட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மீறி கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பங்கேற்றுள்ள எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காக பதவிநீக்கம்

அவர் பேசுகையில், “ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத செயல். பிரதான அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்பதற்காக ஒரு போலி வழக்கை, இத்துப்போன வழக்கை போட்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே யாரும் இதுபோல் வழக்கு போட்டிருக்க மாட்டார்கள்.

ராகுல் காந்தியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக, தூங்கி கிடந்த வழக்கை, 15 நாட்களில் வேகப்படுத்தி தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்காக இந்த தண்டனை அல்ல. அவர் நாடாளுமன்றத்தில் இனி பேசக்கூடாது என்பதற்காகவே தண்டனை கொடுத்து பதவிநீக்கம் செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

நான் பேசுவதே போராட்டம் தான்

தொடர்ந்து அவர், “தெருவில் இறங்கி போராடுவது மட்டுமே போராட்டம் கிடையாது. நாங்கள் பேசுவது கூட போராட்டம் தான். மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே எங்கள் குறிக்கோள். அதனை கண்டிப்பாக செய்து வருகிறோம். போராட்டங்கள் பல வடிவில் நடக்கும். கூட்டத்தை வைத்து எடை போட வேண்டாம்.

காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டி மோதலும் இல்லை. கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. அனைவரும் ராகுல் காந்தி பின்னால் ஒற்றுமையாக நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

“அதிமுக சட்ட விதிகள் மாற்றம்”: ஓபிஎஸ் காட்டம்!

“கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்”: ராமதாஸ்

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *