போர் விமான விபத்தில் 2 விமானிகள் பலி… விசாரணைக்கு உத்தரவு!

அரசியல்

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் நேற்று இரவு உயிரிழந்தனர். இதனையடுத்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லையான பார்மெரில் விமானப்படைக்கு சொந்தமான இரு இருக்கைகள் கொண்ட மிக்21 ரக போர் விமானம் ஒன்று நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இரவு 9.10 மணியளவில் திடீரென விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் பயிற்சி மேற்கொண்ட இரு விமானிகளும் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG 21 பயிற்சி விமானம் இன்று இரவு 9:10 மணியளவில் விபத்துக்குள்ளானது. அதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

பார்மேர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜக்கு ராம் கூறுகையில், இரவு 9 மணியளவில் நடந்த விபத்து குறித்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விபத்தினை தொடர்ந்து உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் அதிகளவு கூடினர். அவர்களிடம் பேசி அனுப்பி வைத்தோம்” என்றார்.

பார்மரில் IAF MiG 21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு IAF பைலட்டுகள் பணியின் போது உயிர் இழந்தது வருத்தமடைய செய்துள்ளது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.