மோடிக்கு பன்னீர் வாழ்த்து: பாஜகவின் வெற்றி அதிமுகவில் எதிரொலிக்குமா?

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதியே முறிந்துவிட்ட நிலையில்…  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆ,கிய மாநில தேர்தல்களில் பாஜக இன்று ( டிசம்பர் 3) பெற்றுள்ள வெற்றிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிற ஓ.பன்னீர், நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் பன்னீர் அதிமுக கரை வேட்டி கட்டினால் கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவோம் என்று அதிமுக சொல்லியிருக்கிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக இன்று பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியிருக்கிறார் ஓபிஎஸ்.  தன்னுடைய சட்டமன்ற உறுப்பினருக்கான லெட்டர்ஹெட்டில்  பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் அக்கடிதத்தில்…

“ இன்று மூன்று மாநிலங்களில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி என்பது நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டு வரும் உங்களது நலத்திட்டங்களுக்கான வெற்றியாகும். ஆக்கபூர்வமான மாற்றத்துக்காக நாட்டு மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது.
இந்த வெற்றியை நாம் கொண்டாடும் வேளையில் நாட்டு நலனுக்கான உங்களின் தொலை நோக்குப் பார்வைக்கு  எனது முயற்சிகளை மேலும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். மக்கள் நலத் திட்டங்களை சமுதாயத்தின் கடைக் கோடி மனிதருக்கும் கொண்டு போய் சேர்த்திட உங்கள் வழிகாட்டுதலில் நாம் இணைந்து செயல்படுவோம். நாட்டு நலனுக்காக உங்களுடன் நிற்கிறேன்” என்று  கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில்…பாஜகவின் இந்தத் தேர்தல் வெற்றிக்கு பன்னீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக இப்போது பெரிய தேர்தல் வெற்றி பெற்றுள்ள நிலையில் இது அதிமுகவில் எதிரொலிக்குமா  என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேந்தன்

மிக்ஜாம்’ புயல் : எந்தெந்த மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை?

சத்தீஸ்கர் : 2018ல் விட்டதை 2023ல் பிடித்த பாஜக!

 

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *