நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக தேசிய தலைவர் நட்டா நாளை (பிப்ரவரி 11) சென்னை வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக தேசிய தலைவர் நட்டா நாளை சென்னை வருகிறார்.
நாளை மதியம் சென்னை விமான நிலையம் வரும் அவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்கும் நட்டா, தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
அப்படி நட்டா சந்திக்கப்போகும் கூட்டணித் தலைவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், 5 தலைவர்களை நட்டா சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதன்படி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம், ஐஜேகே நிறுவனர் பச்சமுத்து ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து நாளை மாலை வடசென்னை மின்ட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொள்ளவுள்ளார்.
பிரியா
கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் நகரப் பேருந்துகள்: எடப்பாடி வலியுறுத்தல்!
‘வாடிவாசல்’ ஹீரோ மாறிட்டாரா?… லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!