பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினரை பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பாகுபாடு காட்டி புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து சென்னையில் நேற்று அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
எடப்பாடி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அந்த அணியினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபாடு காட்டும் அண்ணாமலை?
இதுதொடர்பாக அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறுகையில், “ அதிமுக பொதுச் செயலாளர் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பன்னீர்செல்வத்தை அதிமுகவின் “ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடாத, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பழனிசாமியை “இடைக்கால பொதுச் செயலாளர்” என்று குறிப்பிடுகிறார்.
இது அண்ணாமலை சுயமாக எடுத்த விஷயமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் இதேபோல் நடந்து கொண்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். இருவருக்கிடையே பாகுபாடு காட்டும் அண்ணாமலையின் அணுகுமுறையை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக கடந்த வாரம் சிவகங்கையில் நடந்த குழு கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியை விட பன்னீர்செல்வம் பாஜகவிற்கு தீவிரமாக ஆதரவு தரும் நிலையில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் தற்போது ஜார்க்கண்ட் கவர்னராக பொறுப்பேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் பன்னீர்செல்வம் தரப்பினர் அழைக்கப்படவில்லை. இந்த சம்பவம் மீண்டும் பன்னீர் தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செல்ல பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும் சச்சின்