பசும்பொன் சென்று கொண்டிருக்கும் போது ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் படையெடுத்துள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன்னுக்குச் சென்று மரியாதை செலுத்தினர். பசும்பொன்னுக்கு சென்று கொண்டிருக்கும் போது மானாமதுரை அருகே வைகை ஆற்று பாலத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன் ஆகியோரது கார்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் சென்ற கார் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளது.
முதலில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்காக அவர் திறந்தவெளி வேனில் வந்தார். பின் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் கார்கள் அணி வகுத்தன.
பின்னர் கோரிப்பாளையத்திலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பசும்பொன் கிளம்பினர். ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நூற்றுக்கணக்கான கார்கள் வரிசைக்கட்டி பசும்பொன் புறப்பட்டது.
ராமநாதபுரம், பார்த்திபனூர் சுங்கச்சாவடி பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கார்கள் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் வந்த ஓபிஎஸின் ஆதரவாளார் கார் ஒன்று டயர் வெடித்து விபத்தில் சிக்கியது.
அந்த கார் ஏடிஎஸ்பி சுகுமாறன் வாகனத்தின் மீது மோதியதில், போலீசாரின் வாகனம் சாலை தடுப்பில் மோதி அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த காவலர் முஜிபுர் ரஹ்மான் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
பிரியா
ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக கூட்டணி கட்சிகள்!
“தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு : டி.ஆர்.பாலு பதில்!