அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஓபிஎஸ் மனுவைத் தள்ளுபடி செய்தது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்தது. அதன்படி அதிமுக கட்சி ஈபிஎஸ் வசமாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பொதுச் செயலாளர்கள்தான்’ என்று கூறினார்.
இந்நிலையில் இன்று மாலை ஓ.பன்னீர் செல்வம் தேனியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே புறப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விரைவில் நல்லதொரு அறிக்கை வெளியிடப்படும்.
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கூறினார்.
பிரியா
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
காயத்ரி கொடுத்த கீ: போராட்டத்தை அறிவித்த திருமா