அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தடை செய்யக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 18) கடிதம் அனுப்பியுள்ளார்.
வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேவேளையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிதனியே மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்ட விதிகளுக்கு விரோதமானது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
விசாரணை நடக்கும்போதே தேர்தல் பற்றிய அறிவிப்பு விதிகளுக்கு மாறானது.
எனவே அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது. அதனை தடை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
இனி அப்படி செய்யாதே’: சிராஜை எச்சரித்த ஷமி
’பத்து தல’ ரசிகர்கள் வெள்ளத்தில் சிம்பு