மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கழக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தேர்தலில் கட்சி வெற்றி பெறும். சாதாரண தொண்டன் கூட கழக விதிகளின்படி கழகத்தின் உட்சபட்ச பதவிகளுக்கு போட்டியிடலாம். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த கழகத்தின் சட்டவிதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்.
அதிமுகவின் சட்ட விதிப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். உறுப்பினர்களாக இருப்பவர்கள் புதுப்பிப்பிக்க வேண்டும்.
சட்ட விதிகளின்படி அனைத்து கிளை கழகங்களுக்கும் புதிதாக உறுப்பினர் படிவங்கள் கொடுக்கப்பட வேண்டும். உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் கொடுத்த பிறகு கழகத்தின் சட்ட விதிகளின்படி அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இதன்பின்னர் கழகத்தின் அமைப்பு ரீதியான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும். அப்படி தேர்தல் நடத்தினால் அனைத்து கீழ் நிலையில் இருக்கின்ற தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகும். இந்த சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
காங்கிரஸ் போராட்டம்: டெல்லியில் அனுமதி மறுப்பு!
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவன்: சடலமாக மீட்பு!