“எடப்பாடி கம்பெனிக்குள் அதிமுக இருக்கக்கூடாது”: ஓபிஎஸ்

அரசியல்

எடப்பாடி கம்பெனிக்குள் அதிமுக இருக்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த மாநாட்டில் போலி பொதுக்குழுவின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது செல்லாது, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவை கலைக்க வேண்டும், கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கி விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்,

நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா மட்டுமே நீடிப்பார், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார், ஜாதி மதம் இனம் இல்லாமல் இந்த இயக்கம் வீறு நடை போடும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியபோது,

ஜெயலலிதா அவர்கள் பன்னீர் செல்வத்தை தொண்டனாக பெற்றது நான் பெற்ற பாக்கியம் என்று ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.

அவர் என்னை இரண்டு முறை முதல்வராக நியமனம் செய்தார். மூன்றாவது முறை சின்னம்மா அவர்கள் தான் என்னை முதல்வராக மாற்றினார்கள். முதல்வர் பதவியை திரும்ப கேட்டார்கள் நான் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எனக்கு தந்த பதவியை நான் திருப்பி கொடுத்து விட்டேன்.

ஐயா பழனிசாமி அவர்களே உங்களுக்கு யார் பதவி கொடுத்தது. சின்னம்மா அவர்கள் உங்களுக்கு முதல்வர் பதவியை தந்தார்கள். அவர்களை பார்த்து நாய் என்று கூறுகிறீர்கள். வரலாறு உன்னை மன்னிக்காது. இப்படிப்பட்ட ஓர் ஆள் தனக்கு தானே கழகத்தின் பொதுச்செயலாளராக முடிசூட்டிக்கொண்டுள்ளார்.

எம்ஜிஆர் என்றால் அழகான தொப்பி, கருப்பு கண்ணாடி என்று அவருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. தொப்பிக்கும் கருப்பு கண்ணாடிக்கும் அழகு சேர்த்தவரே எம்.ஜி.ஆர் தான்.

அதனை போட்டுக்கொண்டு கேமராவில் நின்று போஸ் கொடுக்கிறியே இது எவ்வளவு பெரிய அவமானம். நீயும் எம்ஜிஆரும் ஒன்றா. அவரது கால் தூசிக்கு நீ ஆக மாட்டாய்.

கோடிக்கணக்கான பணத்தை குவித்து வைத்துக்கொண்டு அதனை வைத்து மாவட்ட செயலாளர்களையும் தலைமை கழக நிர்வாகிகளையும் விலைக்கு வாங்கி சட்டவிதிகளை எடப்பாடி மாற்றியுள்ளார்.

ஜூலை 11-ஆம் தேதி 2 ஆயிரம் கேடிகளையும் ரவுடிகளையும் கொண்டு வந்து போலி பொதுக்குழுவை நடத்தினர்.

அவர்களது பணத்திமிரை அடக்கி ஒடுக்கி கழகத்தை மீண்டும் ஜனநாயக பாதையில் கொண்டு செல்வோம். அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல மாநாடு நடத்தப்படும்.

எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை துரோகத்திற்கு சாவு மணி அடித்தே ஆக வேண்டும்.

அதனை செய்து முடிக்கின்ற ஆற்றல் தொண்டர்களாகிய உங்களுக்கு தான் இருக்கிறது. எடப்பாடி கம்பெனிக்குள் நம்முடைய கட்சி இருக்கக்கூடாது.

நாம் நடத்துகின்ற தர்ம யுத்தத்தில் ஜாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை. ஒருங்கிணைந்து வாழக்கூடிய சமத்துவ மக்களாக இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

ops says aiadmk should not go edappadi company
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *