விரைவில் அதிமுகவில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி அனைவரும் இணைவார்கள் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை போயஸ்கார்டனில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சசிகலா பூஜை செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் வெற்றி மக்களின் வெற்றி. தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை யாரிடத்தில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
அதனால் தான் நான் செல்லும் இடமெல்லாம் வந்து என்னிடம் குறைகளை தீர்க்கக்கோரி முறையிடுகிறார்கள்.
நான் புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் பல கிராமங்களில் மக்கள் என்னைத் தேடி வந்து பிரச்சினைகளை சொல்கிறார்கள்.
தற்போதுள்ள அரசு மக்களுக்கான அரசாக இல்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி பலமுறை திமுக அரசை வலியுறுத்தி இருக்கிறேன்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.
தற்போது அதே கருத்தை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருக்கிறார், விரைவில் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை சரியாகிவிடும்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
கலை.ரா
எடப்பாடி, சசிகலா, தினகரன் : அனைவரும் ஒன்றிணைவோம் – பன்னீர்