தீர்ப்புக்கு பிறகு ஓபிஎஸ் சொன்னது என்ன?: ஐயப்பன் எம்.எல்.ஏ!

அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல் முறையீட்டுக்கு செல்வோம் என்றும் இதில் எந்த பின்னடைவும் இல்லை என்றும் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அண்மையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்த ஐயப்பன் எம்.எல்.ஏ கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் பன்னீர் பக்கம் தாவினர். உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஐயப்பன்

கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில், இதுதொடர்பாக ஐயப்பன் எம்.எல்.ஏ.விடம் பேசினோம்.

அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இந்த தீர்ப்பு குறித்து ஓபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எல்லோரும் கலந்து பேச உள்ளோம்.

இது தேர்தல் கமிஷன் வரை சென்றுகொண்டேதான் இருக்கும். அதற்கு பதிலாக ஓ.பன்னீர் செல்வமும் , எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக அமர்ந்து பேசினாலே இந்த பிரச்சனை எல்லாம் சரி ஆகிவிடும்” என்று கூறினார்.

ஓபிஎஸ் அழைப்பின் பேரிலேயே தான் அவருடன் இணைந்துள்ளதாக கூறிய அவர், “ அதிமுக ஒரு மாபெரும் கட்சி. இந்த கட்சி ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து வளர்த்த கட்சி.

‘எனக்கு பின்னாலும் அதிமுக தமிழகத்தை ஆள வேண்டும்’ என்ற ஜெயலலிதாவின் கனவு நிறை வேற வேண்டும் என்றால் அதிமுகவினர் ஒன்றாக வேண்டும்” என்றார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்து கூறுகையில், ”கட்சி ரீதியில் எனக்கு அவர் நண்பர். நான் அவரின் ஆதரவாளார் கிடையாது.

ஒற்றை தலைமை என்ற வாதம் வந்த பொழுதே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சி நன்றாகத் தான் சென்று கொண்டிருக்கிறது அவசரப்பட வேண்டாம்.

இது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் அதை அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை.

எல்லோரும் தைரியமாக இருப்போம். அடுத்தகட்ட நடிவடிக்கை குறித்து ஆலோசிப்போம்” என்று ஓ.பி.எஸ் கூறினார்” என குறிப்பிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம்: சென்னை கிளம்பிய பன்னீர்

+1
0
+1
3
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *