பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மனு!

அரசியல்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை நேற்று (மார்ச் 17) இரவு அறிவித்தது.

இன்று காலை அதிமுக அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகளான பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் தாக்கல் செய்தார். 

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடமாட்டார்கள் என்பதால் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பகல் 12 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தசூழலில் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து முறையிடப்பட்டது.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனோஜ் பாண்டியனின் முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.

இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

பிரியா

“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

வீட்டுவசதி வாரிய வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.