அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முழுமையான வெற்றியைக் கொடுக்கவில்லை என்று தகவல்கள் பரவி வருகிற நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜூலை 24) புதிதாக 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்… அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக வெங்கட்ராமன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக ஆர். தர்மரும், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கோவை செல்வராஜும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.பி., ஆர்.கோபாலகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னையில் ஓபிஎஸ் சின் தீவிர ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர், வெங்கட்ராமன் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர், எம்.எம்.பாபு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரெட்சன் அம்பிகாபதி தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராகவும், ரமேஷ் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்மோகன் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராகவும், மதியழகன் வடசென்னை தெற்கு( மேற்கு) மாவட்ட செயலாளராகவும், அசோகன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராகவும், சிவலிங்கமுத்து திருநெல்வேலி புறநகர மாவட்ட செயலாளராகவும், வி.கே.கணபதி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராகவும் பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே நேற்று ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் முன்பு நியமிக்கப்பட்டு பின் அகற்றப்பட்ட தொகுதிச் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்களை மீண்டும் செயல்பட அனுமதிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார்.
வேந்தன்