அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்தார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்குப் பின்னடைவுதான் ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
இதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு. இதனிடையே கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மற்றும் மாநாடு நடத்தினார் ஓபிஎஸ்.
இந்த மாநாட்டுக்கு அமமுக பொதுச்செயலாளர் அழைக்கப்படுவார் என்று பேசப்பட்ட நிலையில், அவர் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதால் அழைக்கவில்லை. தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய மாநாடு இது என ஓபிஎஸ் தரப்பினர் கூறியிருந்தனர்.
நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்திக்க வந்தால் நான் சந்திப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழலில் இன்று இரவு 7 மணிக்கு அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்துக்குச் சென்ற ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசி வருகிறார். அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றுள்ளார்.
பிரியா
பால்ய திருமணம், இரு விரல் டெஸ்ட்… உண்மை என்ன? – மின்னம்பலம் புலனாய்வு ரிப்போர்ட்!
டிடிவி தினகரனை சந்திக்கிறார் பன்னீர்