அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் இன்று ஒப்புதல் படிவங்களை அளிக்க உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அவைத்தலைவர் நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. குறிப்பாக தமிழ் மகன் உசேனின் நடவடிக்கைகள் ஒருதலைபட்சமாக உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியிருந்தார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட வேட்பாளர் ஒப்புதல் படிவ அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
செல்வம்
அதானிக்கு எதிராக போராட்டம்: முடங்கியது நாடாளுமன்றம்!
பயிர் சேதம்: முதலமைச்சர் ஆலோசனை!