வேட்பாளர் படிவம்: ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அதில், அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டு, பொதுக்குழு உறுப்பினகளுடைய ஒப்புதலை பெற்று வேட்பாளர் குறித்த விவர அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு பதிலாக வேட்பாளர் விவரம் கொண்ட ஒரு விரிவான சுற்றறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களுடைய ஒப்புதலையும் பெற்று விவர அறிக்கையாக தயார் செய்ய அவைத்தலைவர் தமிழ் மகன் முடிவு செய்துள்ளார்.

இன்று முதல் வேட்பாளர் ஒப்புதல் படிவமானது அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

மேலும் மாநிலங்களை உறுப்பினர் சி.வி.சண்முகத்திடம் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம், சேலம் மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சந்தித்தனர்.

அவர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, கட்சியின் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றின் நகல் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து,

சேலம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கொடுத்து வேட்பாளர் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

செல்வம்

இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு ஒப்புதல் பெற ஈபிஎஸ் தரப்பு தீவிரம்!

களைகட்டும் பழனி கோவில்: இன்று மாலை தேரோட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *