மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.ஆனால் ஓபிஎஸ் அணி கேட்கும் தொகுதிகளை பாஜக தர மறுப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இன்று (மார்ச் 21) இரவு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பன்னீர்செல்வம் கூறுகையில், “இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. இதில் 15 தொகுதிகளில் போட்டியிட பாஜகவிடம் கேட்டிருந்தோம்.
ஆனால் இரட்டை இலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், முடிவு பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே தொண்டர்களின் பலத்தை நிரூபித்து காட்டுவதற்கான கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு தொகுதியில் நிற்க முடிவெடுத்து இருக்கிறோம்.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறோம் என்றார்.
வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த வைத்தியலிங்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் உரிமை குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் போட்டியிடுவார் என்றார்.
“எங்களுக்கு அதிகமான தொகுதிகளை தருவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் இரட்டை இலை சின்னம் இப்போதைக்கு இல்லாத காரணத்தால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்றார் ஓபிஎஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை!4Am waiting : அண்ணாமலையை வரவேற்ற அதிமுக கோவை வேட்பாளர்!