ஓபிஎஸ் அப்பீல்: நாளை விசாரணை!
அதிமுக 2022 ஜூலை 11 ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று (2023 மார்ச் 28) தீர்ப்பளித்தார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்றும் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து ஏற்கனவே நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலின் முடிவை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார்.
தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் தரப்பினர் உடனடியாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் மேல் முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் ஆர்.மஹாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் இந்த மேல் முறையீட்டை நாளை அதாவது இன்று (மார்ச் 29) விசாரிப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று ஓ. பன்னீர் தரப்பின் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, நேற்று நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பு நகலை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள்… நீதிமன்ற பதிவாளரிடம் பன்னீர்செல்வம் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிடுமாறு தெரிவித்துள்ளனர்.
–வேந்தன்
பயணிகளே உஷார்… பேருந்துகளில் பரவும் கொரோனா : ஆய்வில் அதிர்ச்சி!
மெஸ்ஸியின் அடுத்த புதிய சாதனை!