கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்ரல் 20) அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவின் அதே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பாக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த நெடுஞ்செழியன் கர்நாடக மாநில மாணவர் அணி செயலாளராக உள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் ஏற்கெனவே பாஜக வேட்பாளராக ஸ்ரீ முரளி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ், இபிஸ் என இருதரப்பும் அதிமுக சார்பில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சொந்த மைதானத்தில் ஸ்லோ… ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ!
முதன்முறையாக மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு மானியம் உயர்வு: சேகர்பாபு