கர்நாடக தேர்தலில் புலிகேசி நகரைத் தொடர்ந்து மேலும் 2 தொகுதிகளுக்கு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.
அங்கு ஏற்கெனவே காங்கிரஸ் – பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கிடையே பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
அதே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பாக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்தார்.
இந்நிலையில் மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளார் ஓ.பி.எஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜும் மற்றும் காந்திநகரில் குமாரும் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும் நிலையில் மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஓபிஎஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தள்ளுபடி செய்யப்பட்ட ராகுல்காந்தி மனு: அடுத்தது என்ன?
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!