நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசிக்க தொடங்கும்போது நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே தொடர்ந்து 8வது முறையாக மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை அவர் வாசிக்கத் தொடங்கினார்.
அகிலேஷ் தலைமையில் வெளிநடப்பு! opposition walks out during budget
அப்போது, உத்தரபிரதேசத்தில் மகா கும்ப மேளாவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டப்படி ஒட்டுமொத்தமாக அவையை வெளிநடப்பு செய்தனர். sition walks out during budget