அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
அதானி முறைகேடுகள் குறித்து கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று (மார்ச் 17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி துவங்கியது.
கூட்டத்தொடர் துவங்கியது முதல் லண்டனில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக ஆளும் கட்சியான பாஜகவும்,
அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.
இதனால் மக்களவை, மாநிலங்களவை கடந்த நான்கு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது. இன்று 5-வது நாளாக காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் துவங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் மார்ச் 20-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி-க்கள் அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்வம்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!
பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!