கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று (மே 20) பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றனர்..
இந்நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் யார் யார்?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மத்திய பிரதேஷ் முன்னாள் முதல்வர் கமல்நாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான, பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்) மற்றும் சுக்விந்தர் சிங் சுகு (இமாச்சலப் பிரதேசம்),
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்,
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, சிவசேனா எம்.பி.அனில் தேசாய், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சிங், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி.டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த மெகா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
போட்டோ கேலரி
பிரியா
2 மணி நேரத்தில் 5 வாக்குறுதிகள் சட்டமாக மாறும்: ராகுல் காந்தி
ஐபிஎல்: ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை!
“தெற்கின் விடியல் இந்தியா முழுவதும் பரவட்டும்”: ஸ்டாலின்