"Opposition parties are indulging in false propaganda" - Nirmala Sitharaman

”கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பிரச்சாரம்” : திமுக, காங்கிரஸை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

அரசியல் இந்தியா

காங்கிரஸ், திமுக கட்சியினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக இன்று (ஏப்ரல் 2) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை, பல்லாவரத்தில் “விக்சித் பாரத்” மூலமாக பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை சம்பந்தபட்ட விவகாரத்திற்கு தேர்தல் நேரம் தேவை இல்லை.

இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை குறித்து எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேசலாம்.

கச்சத்தீவு விவகாரம் 1974ஆம் ஆண்டு நடந்தது. அந்த விவகாரம் குறித்து நாங்கள் இப்போது பேசுவதற்கு காரணம் உள்ளது.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் 50 வருடங்களுக்கு ஒரு உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது.

எங்களுக்கு தெரியாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது, யாரோ கொடுத்து விட்டார்கள், எப்படி கொடுக்கப்பட்டது, என்ன என்று எங்களுக்கு தெரியாது, யாரும் அதை தற்போது வரை மீட்கவில்லை என பொறுப்பில்லாமல் எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர்.

மீனவர்களின் பிரச்சனைக்கும், கச்சத்தீவு விவகாரத்திற்கும் சம்மந்தம் இல்லை என இன்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

மீனவர்களுக்கும், கச்சத்தீவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்றால், 1974ஆம் ஆண்டு ஏன் அந்தளவுக்கு பிரச்சனைகள் எழுந்தன.

கச்சத்தீவிற்கும், மீனவர்களுக்கும் இப்போது வரை சம்மந்தம் உள்ளது.

கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்படும் போதும் காங்கிரஸ், திமுகவினர் கூட்டணியில் தான் இருந்தனர். தற்போதும் கூட்டணியில் தான் உள்ளனர்.

1974ல் ஒரு விசயம் செய்து விட்டீர்கள், அதுபற்றி தற்போது கேட்டால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.

காங்கிரஸ், திமுக இரு கட்சியினரும், பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தான் தற்போது நான் உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் என்று கூறுகிறேன்.

தேசிய கட்சியான காங்கிரஸ், 1964க்கு பின்னர் இப்போது வரை தமிழகத்தில் தனித்து ஆட்சியை பெற முடியவில்லை.

ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து தான் வெற்றி பெறுகிறார்கள். அவர்களின் வாக்கு சதவீதம் 5% என்ற அளவில் தான் உள்ளது.

ஜவஹர்லால் நேருவின் கடிதத்தில், “கச்சத்தீவு ஒரு சிறு பகுதி. அது சீக்கிரத்தில் எங்கள் கையை விட்டு சென்றால் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இந்திரா காந்தி, “கச்சத்தீவு ஒரு சிறு கல்பாறை. அதை இலங்கைக்கு கொடுப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கெல்லாம், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனரா? அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா?

அவர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் கச்சத்தீவு விவகாரம் தற்போது வெளியாகிவுள்ளது.

இது தேர்தல் காரணமாக வெளியிடப்படவில்லை. தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கச்சத்தீவு விவகாரம் வெளியிடப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களுக்கு கச்சத்தீவு குறித்த உண்மை தெரியவேண்டும். பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எங்களிடம் ஆதாரம் உள்ளது.

1974லேயே கருணாநிதிக்கு மத்திய அரசு சார்பாக கச்சத்தீவு கொடுக்கப்பட்டால் எந்த மாதிரியான விளைவுகள் இருக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இப்படி, தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் ஈடுபடும்போது தமிழகத்தில் இருந்த திமுக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதேபோல், ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போதும், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியாக திமுக தான் இருந்தது. ஏன் அப்போது எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.

2014ல் மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து, 21 கடிதம் கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் எழுதப்பட்டு உள்ளது.

முதலில், உங்களது பொய் பிரச்சாரத்தை சரி செய்யுங்கள்”என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”பாஜக டெபாசிட் இழக்க வேண்டும்” : கலாநிதிக்கு வாக்கு சேகரித்த உதயநிதி

நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *