எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பாட்னா கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. இன்றுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே “எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அனைத்து தலைவர்களிடமிருந்து பெயர் வைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி Indian National Developmental Inclusive Alliance என்ற பெயரை அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திருமா வைத்த கோரிக்கை!
அமலாக்கத் துறை விசாரணைக்கு புறப்பட்டார் பொன்முடி