பிகாரில் இன்று (ஜூன் 23) சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார்.
இதனையடுத்து பிகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23 (இன்று) எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி என 6 மாநில முதல்வர்கள் உட்பட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே என 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதிக்கான கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைத்து கட்சிகளும் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அதேநேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்த முடிவுகளும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
போர் தொழில்: பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு?
மாமன்னன் படத்திற்கு தடை கோரி மனு: உயர்நீதிமன்றம் உத்தரவு!