கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்று பார்வையிட உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி சமூக மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரு சமூக மக்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி குகி பழங்குடியின பெண்களை மெய்தி சமூக ஆண்கள் ஆடையின்றி நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்தது 140 கோடி இந்தியர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது.
இந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி எம்.பிக்கள் பார்வையிட உள்ளனர். முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
“ED இயக்குநர்” – இனி பணி நீட்டிப்பு கேட்டு வரக்கூடாது: உச்ச நீதிமன்றம்!