”என் பேச்சை வெட்டி, ஒட்டி அவதூறு பரப்புகின்றனர்” : ஈவிகேஎஸ் இளங்கோவன்

அரசியல்

தான் பேசிய முந்தைய பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும் தனக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாக இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா.திருமகன் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மறைந்த திருமகனின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “எனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புகிறேன். அதன் காரணமாகவே ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறேன்.

தனது தாத்தா பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும் , தனது அப்பா சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தனது மகன் திருமகன் ஈவெரா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஈரோட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பணிகளை செய்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிச்சயம் தாம் தொடர்வேன்.” என்று பேசினார்.

அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்றினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “பல்வேறு அரசியல் சூழல்களில் தாம் பேசிய தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருகின்றனர். அதனை நான் பொருட்படுத்த போவதில்லை” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்

கிறிஸ்டோபர் ஜெமா

”அதிமுக காத்திருக்கட்டும்; அதுபற்றி பாஜகவிற்கு கவலை இல்லை” – நாராயணன் திருப்பதி

வேலுமணி வழக்கில் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *