பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வாழ்த்திய முதல்வர்!

அரசியல் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஆனால் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்ப அளவு தொடர்ந்து பதிவானதால், 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 12- ஆம் தேதியும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று(ஜூன் 12) திறக்கப்பட்டன.

அரசு துணை நிற்கும்!

இந்நிலையில், மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்!

நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.”என்று கூறியுள்ளார்.

அமைச்சர் வாழ்த்து!

அதேபோன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளோடு கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

வருங்கால வளமான சமுதாயத்தை உருவாக்க, அனைத்து மாணவச் செல்வங்களையும் அன்போடு வரவேற்கின்றோம்! ” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’ஆதிபுருஷ் டார்ச்சரா?’: கொந்தளிக்கும் பிரபாஸ் ரசிகர்கள்

பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பறந்த அதிரடி உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0