ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு வீடுகளில் தீபம் ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளது. இதனைத் தீபாவளி போல் கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது 140 கோடி இந்தியர்களும் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநரும் தீபம் ஏற்றுமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜனவரி 22) அவர் தனது எக்ஸ் பக்கத்தில் , “நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டுச் சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். ‘ஸ்ரீ ராமர்’ பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலைப் பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளைக் கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“ராமர் கோயில் – கேள்வி கேட்டால் ICE வைப்பார்கள்” : இளைஞரணி மாநாட்டில் கனிமொழி