புதுப்பள்ளி இடைத்தேர்தல்: உம்மன் சாண்டி மகன் வெற்றி!
கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 37719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை 19-ஆம் தேதி காலமானார். அவரது மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். செப்டம்பர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சாண்டி உம்மன் 80,144 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்க் சி தாமஸ் 42,425 வாக்குகளும், பாஜக 6,558 வாக்குகளும் பெற்றுள்ளது.
உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு தனது தந்தையின் சாதனையை முறியடித்துள்ளார். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் 33,225 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. இந்தநிலையில் சாண்டி உம்மன் 37,719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
செல்வம்
“மாரிமுத்து அருமையான மனிதர்”: ரஜினிகாந்த் இரங்கல்!
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல்!