Annamalai angry to bjp members

110 பேர்தானா? அண்ணாமலை கோபம்!

அரசியல்

தனது வீட்டுக்கு அருகே கொடிக் கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆம் தேதி இரவு பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது அண்ணாமலை வீட்டில் இல்லை.

அதன் பின் தகவல் அறிந்து எத்தனை பேர் போராடினார்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அப்போது 110 பேரை போலீஸார் பிடித்துச் சென்று அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பிறகு விட்டுவிட்டதாக அண்ணாமலைக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்ததும் சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளரான மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் சில நிர்வாகிகளிடம் பேசிய அண்ணாமலை,

‘என்னண்ணே… மாநிலத் தலைவர் வீட்டு வாசல்ல இருக்குற கொடிக் கம்பத்தை தூக்கியிருக்காங்க. வெறும் 100 பேர், 110 பேர்னுதான் வந்தாங்களா?.

அதான் ஈசியா கொண்டு போய் அடைச்சு வச்சுட்டு கொடிக் கம்பத்தை தூக்கிட்டாங்க. ஆயிரம் பேர் திரண்டிருந்தா போலீசால கொடிக் கம்பத்தை தொட்டிருக்க முடியுமா?

சென்னையில ஏழு மாவட்ட அமைப்புகள் இருக்கு. ஒரு மாவட்டத்துக்கு 100 பேர்னா கூட 700 பேர் கூடியிருக்கலாமே? சென்னையில நான் கலந்துக்குற ஒவ்வொரு ஆர்பாட்டத்துலையும் போராட்டத்துலயும் தொடர்ந்து பாத்துட்டு வர்றேன். ரொம்ப குறைவாதான் கூட்டம் கூடுது. இது நல்லா இல்லை.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அன்னிக்கு ஆயிரம் பேர் திரண்டிருந்தா போலீஸ் திரும்பிப் போயிருக்கும். கட்சிக்கு மிகப்பெரிய இமேஜா ஆயிருக்கும். ஆனா பிஜேபிகாரனை அடிச்சுப் போட்டுட்டு போலீஸ் கொடிக் கம்பத்தைத் தூக்கிட்டுப் போற அளவுக்கு நாம விட்டுட்டோம்” என்று டோஸ் விட்டிருக்கிறார் அண்ணாமலை.

-வேந்தன்

KH233 படத்திற்கு டைட்டில் என்ன? 

அண்ணாமலை வீட்டு வாசலில் அன்று நடந்தது என்ன?

+1
0
+1
14
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *