முதல்வரே பொறுப்பு : ஆளுநருக்கு ஆதரவாக அண்ணாமலை

Published On:

| By Kavi

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாகத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிசம்பர் 1) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆளுநர் இந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது, இன்னும் சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன் என்று தெரிவித்தார் என்றார்.

இந்த பேட்டியின் போது, ஆன்லைன் தடை சட்டம் குறித்தான ஜிஓ போடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்.

தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி தமிழக ஆளுநரின் மேல் பழியைப் போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்குப் பொறுப்பேற்க வேண்டும்` என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பு என்று தமிழக அரசியல் கட்சிகள் கூறி வரும், நிலையில் முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பிரியா

வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

மெஸ்ஸியும்..! தொடரும் மிஸ்ஸிங் பெனால்டியும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share